கோல்கட்டா மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
கடந்த, 2016ல், முதல்வர் மம்தா பானர்ஜி அரசில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரை நியமிக்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை, சி.பி.ஐ., தனித்தனியே வழக்குப் பதிவு செய்த விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில், 2022ல் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, அவரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி நீக்கினார்.
இந்நிலையில், ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் கூறுகையில், ‘மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல்படியே, குற்றப் பத்திரிகையில், முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டது’ என தெரிவித்தனர்.
குற்றப் பத்திரிகையில் மாநில அமைச்சரின் பெயரை சேர்க்க, கவர்னரின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement