Captain Miller: "நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா…"- ஜி.வி.பிரகாஷ் பாடல் அப்டேட்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம்  தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது. படத்தின் டீசர் வெளியான நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ பூஜையின் போது…

படத்திற்காக தனுஷ் டப்பிங் வேலைகளைத்  தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்நிலையில் இப்படத்தின் பாடல் தொடர்பான அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம்  ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார்.

I have tasted steel before

I have the scars… 

U will learn to fear my

name and ur eyes will

never see the same…

GV Prakash

நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்

நீ படையா வந்தா சவ மழ குவியும்

Killer killer 

Captain Millerrrrr… என்று படத்தின் பாடல் வரிகளைப் பகிர்ந்து பாடலுக்கான ஆடியோ பணிகள் நடந்து வருகின்றன எனத் தெரிவித்திருக்கிறார். இப்பாடல் வரிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.