சாட்ஜிபிடி கூட இனி பேசலாம்… இமேஜ் போட்டாலும் பதில் கிடைக்கும்

சாட்ஜிபிடியின் வருகைக்குப் பிறகு டெக் உலகில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் கூகுள் பார்டு என்ற ஏஐ களமிறக்க, இப்போதும் இரண்டுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் கூகுள் மற்றும் சாட்ஜிபிடி இரண்டும் புதுபுதுப் அப்டேட்டடுகளை வெளியிட்டு வருகின்றன. அதில் இப்போது சாட்ஜிபிடி கூடுதல் அம்சங்களை சேர்த்துள்ளது. அதாவது உரையாடி மற்றும் படத்தை பதிவிட்டு பதில்களை பெற முடியும்.

வாய்ஸ் உரையாடல்கள்

யூசர்கள் இப்போது தங்கள் AI உதவியாளருடன் உரையாட முடியும். அதாவது பயணத்தின்போது உங்களுடன் உரையாடவும், இரவு நேரத்தில் சுவாரஸ்யமான கதைகளை கேட்க விரும்பினாலும், டின்னர் எடுத்துக் கொள்ளும்போது விவாதிக்கவும் சாட்ஜிபிடி வாய்ஸ் சாட் ஹெல்ப் செய்யும். இதனை எப்படி சாட்ஜிபிடியில் ஆக்டிவேட் செய்வது என நினைத்தால், செயலியில் செட்டிங்ஸூக்கு செல்ல வேண்டும். அதில் “புதிய அம்சங்கள்” என்பதைத் தேர்ந்தெடுத்து, குரல் உரையாடல்களைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ஐந்துவிதமான குரல்கள் இருக்கும். விரும்பும் குரல்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கூடுதல் அம்சம் என்னவென்றால் பேசும் வார்த்தைகளை உரையாக மாற்றி, ஒட்டுமொத்த உரையாடல் தரத்தை அதிகரிக்கவும் செய்யவும். இதனையடுத்து புகைப்படத்தை பதிவிடும்போதும், அதில் இருக்கும் தகவல்களை பெறுவதற்கும் சாட்ஜிபிடி உதவியாக இருக்கும். 

எப்போது முதல் இந்த அம்சம் கிடைக்கும்?

பிளஸ் மற்றும் எண்டர்பிரைஸ் பயனர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் குரல் மற்றும் படத் திறன்கள் படிப்படியாக வழங்கப்படும். iOS மற்றும் Android இயங்குதளங்களில் குரல் செயல்பாடு கிடைக்கிறது. செட்டிங்ஸ் மூலம் அணுகலாம். அதே நேரத்தில் படத் திறன்கள் எல்லா தளங்களிலும் கிடைக்கும். இந்த மேம்பட்ட திறன்களுடன் தொடர்புடைய அபாயங்கள் நிறைய உள்ளன. 

பட உள்ளீடு தொடர்பாக, OpenAI ஆனது, தனிப்பட்ட நபர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில், பகுப்பாய்வு செய்வதற்கும், நேரடியாக அறிக்கைகளை வெளியிடுவதற்கும் ChatGPTயின் திறனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கருவியின் பயன்பாட்டை நிலைநிறுத்தும்போது, இந்த பாதுகாப்புகளை மேலும் மேம்படுத்துவதில் யூசர்களின் கருத்து முக்கிய பங்கு வகிக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.