வெனிஸ் நகரத்தில் ஐஸ்கிரீம் வாங்க வரிசையில் நின்ற சமந்தா

நடிகை சமந்தாவை பொறுத்தவரை தனது படங்களின் வெற்றி தோல்வி பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. படம் ரிலீஸ் ஆகும் வரை தனது முழு பங்களிப்பையும் கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் நினைத்தபடி அடுத்த பட வேலைகளுக்கோ அல்லது சுற்றுப்பயணமோ கிளம்பி விடுவார். அப்படி சமீபத்தில் தான் நடித்த குஷி திரைப்படம் வெளியாகி இங்கே வரவேற்பு பெற்ற சமயத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார் சமந்தா.

இந்த நிலையில் தற்போது இத்தாலியில் முகாமிட்டு சுதந்திரமாக சுற்றி தெரிந்து வருகிறார் சமந்தா. அப்படி வெனிஸ் நகரத்தில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் அங்குள்ள மக்களுடன் வரிசையில் நின்று ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார் சமந்தா. அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள சமந்தா, ‛காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் தானாகவே தேடி வரும்' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.