
கார் விபத்தில் சிக்கிய சின்மயி : கோபமாக வெளியிட்ட பதிவு
சினிமா பின்னணி பாடகியான சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து பொறுப்பான தாயாக மாறியுள்ளார். இந்நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளபதிவில், ‛‛குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நபர் எங்கள் காரின் மீது மோதிவிட்டார். காரின் இடது பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த எனது குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோல் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டும் நபரின் கைகளை உடைக்க வேண்டும் என்றும் கோபமாக பதிவிட்டு, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள்'' என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.