புதுடில்லிவட மாநிலங்களில், ‘மஹாதேவ்’ என்ற சூதாட்ட செயலியில் லட்சக்கணக்கானோர் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுரப் சந்திராகர், ரவி உப்பால் ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்தபடி இந்த செயலியை இயக்கியது தெரியவந்தது.
சூதாட்டத்தை விளம்பரப்படுத்த, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பெரிய தொகை பெற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்க, அவரை நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement