லைவ்: ஆசிய விளையாட்டு போட்டிகள்.. பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு தொடரில் 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Live Updates

  • 5 Oct 2023 6:48 AM GMT

    ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்ஃபா பிண்டி அஸ்மான்/ முகம்மது சியாஃபிக் பின் முகத் கமல் ஜோடியை 8-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வென்றுள்ள  20-வது தங்கம் இதுவாகும்.

    • Whatsapp Share

  • 5 Oct 2023 5:11 AM GMT

    மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு அரையிறுதி  போட்டியில் இந்தியாவின் பூஜா கெலாட் 0-10 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

    • Whatsapp Share

  • 5 Oct 2023 4:50 AM GMT

    ஆசிய விளையாட்டு: கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி

    கபடி குரூப் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவும் சீன தைபே அணியும் மோதின. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 50-27 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது. குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது.

    • Whatsapp Share

  • 5 Oct 2023 4:09 AM GMT

    வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்

    ஆசிய விளையாட்டு தொடரின் பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

    • Whatsapp Share

  • 5 Oct 2023 3:54 AM GMT

    மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் பூஜா கெலாட் 5-0 என்ற கணக்கில் மங்கோலியா வீராங்கனையை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • Whatsapp Share

  • வில்வித்தையில் இந்திய அணிக்கு பதக்கம் உறுதி
    5 Oct 2023 3:21 AM GMT

    வில்வித்தையில் இந்திய அணிக்கு பதக்கம் உறுதி

    வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அதிதி மற்றும் பர்னீத் ஆகியோர் அடங்கிய அணி இந்தோனேசியாவின் ரைத் பத்லி, ஷியாகரா கோருனிசா மற்றும் ஸ்ரீ ரண்டி ஆகியோரை 233-219 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளி பதக்கமாவது கிடைப்பது உறுதியாகியுள்ளது. 

    • Whatsapp Share

  • ஆசிய விளையாட்டு: பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி
    5 Oct 2023 2:58 AM GMT

    ஆசிய விளையாட்டு: பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

    ஆசிய விளையாட்டு தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் பிவி சிந்துவும் சீனாவின் ஹி பிங்ஜியோவும் மோதினர். ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்று பேட்மிண்டனின்  முன்னணி வீராங்கனையாக விளங்கி வரும் பிவி சிந்து இந்த போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சீன வீராங்கனையிடம் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால், போட்டி தொடரில் இருந்தும் பிவி சிந்து வெளியேறினார்.  

    • Whatsapp Share

  • 5 Oct 2023 2:47 AM GMT

    மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவு ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் பூஜா கெலாட் 10-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • Whatsapp Share

  • 5 Oct 2023 2:45 AM GMT

    பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையிடம் 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தார்.

    • Whatsapp Share

  • 5 Oct 2023 2:07 AM GMT

    ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற செபாக் டக்ரா (Sepaktakraw) முதல் நிலை குரூப் பி’ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும் தாய்லாந்தும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 0-2 என்ற செட் கணக்கில் தாய்லாந்து அணியிடம் வீழ்ந்தது.

    • Whatsapp Share


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.