பழனி பழனிமலை முருகன் கோவிலில் சுமார் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும். இந்த பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இவற்றில் விரைவாகவும், […]
