இப்ப ஸ்மார்ட்வாட்ச் காஸ்ட்லி இல்ல… குறைந்த விலையில் தரமா வாங்கலாம் – பெஸ்ட் 4 இதோ!

Smartwatch Offers In Amazon Sale 2023: வாட்ச் என்பது ஆண், பெண் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். ஆனால், இப்போது வாட்ச் என்பது பரிணாமம் பெற்றுவிட்டது எனலாம். டிஜிட்டல் ஸ்மார்ட் வார்ச்தான் குழந்தைகள், இளைஞர்கள் முதல் அனைவரும் விரும்பி அணிகின்றனர். மேலும், ஸ்மார்ட்போன்களுடன் ப்ளூடூத் மூலமும் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்வாட்சை இணைத்துக்கொள்ளலாம் என்பதால் பலருக்கும் இது பயனுள்ளதாகவும் அமைகிறது. 

அந்த வகையில் தற்போது தள்ளுபடி சீசன் என்பதால் அமேசான், பிளிப்கார்ட் என இரண்டிலும் பல்வேறு ஸ்மார்வாட்ச்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்கள் குறித்தும், அதன் தள்ளுபடி விலை குறித்தும் இதில் காணலாம். 

Fire-Bolt Visionary

Fire-Bolt Visionary ஸ்மார்ட்வாட்ச் அசல் விலை 16,999 ரூபாய் ஆகும். இது 1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட், Always On டிஸ்பிளே மற்றும் SPO2 கண்காணிப்புடன் மனநிலை சார்ந்த டிராக்கிங் போன்ற பல்வேறு ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த வாட்ச் 700 nits பிரகாசத்தைக் கொண்டுள்ளது. சாதாரண பயன்பாட்டில் இது ஐந்து நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. கூடுதலாக, இது IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் AI குரல் உதவியை ஆதரிக்கிறது.

இது ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். டிஸ்பிளே 368X448 பிக்சல் தெளிவுத்திறன், 60Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate), 100+ ஸ்போர்ட்ஸ் மோட், TWS இணைப்பு, குரல் உதவி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 2,199 ரூபாய்க்கு தற்போது அமேசானில் கிடைக்கிறது.

NoiseFit Halo

NoiseFit Halo ஸ்மார்ட்வார்ட்சின் அசல் விலை 7,999 ரூபாய் ஆகும். இது 1.43-இன்ச் AMOLED ரவுண்ட் டிஸ்ப்ளே மற்றும் SPO2 கண்காணிப்புடன் ஸ்ட்ரெஸ் டிராக்கிங் போன்ற பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த வாட்ச் சாதாரண பயன்பாட்டில் ஏழு நாட்கள் வரை பேட்டரி ஆதரவை வழங்குகிறது. இது அமேசானில் 2,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

Noise ColorFit Pro 4 Alpha

Noise நிறுவனம் வழங்கும் இந்த ஸ்மார்ட்வாட்சின் அசல் விலை 7,999 ரூபாய் ஆகும். இது 1.78-இன்ச் AMOLED ரவுண்ட் டிஸ்ப்ளே, ஸ்ட்ரெஸ் டிராக்கிங்குடன் SPO2 மானிட்டர் போன்ற பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த வாட்ச்சின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், சாதாரண பயன்பாட்டில் ஏழு நாட்கள் வரை தாங்கும். இது தற்போது அமேசான் தள்ளுபடி 1,999 ரூபாய்க்கு கிடைக்கிறது, இதில் பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது.

BoAT Xtend Plus

BoAT Xtend Plus ஸ்மார்ட்வாட்ச்சின் அசல் விலை 8,999 ரூபாய் ஆகும். இது 1.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள், Always On டிஸ்ப்ளே மற்றும் SPO2 மானிட்டர் போன்ற பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தற்போது அமேசானில்1,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.