நாகப்பட்டினம் நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடக்க உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகள் கப்பல் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த கப்பல் கொச்சியில் இருந்து புறப்பட்டு இலங்கை வழியாக நேற்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்துக்கு வந்தது. நாகப்பட்டினம் துறைமுகத்தை […]
