பாகிஸ்தான் வீரரை கேலி செய்த கோலி – அதுவும் 1 லட்சம் பேருக்கு முன் – எதனால் தெரியுமா?

IND vs PAK, Virat Kohli vs Rizwan: இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே கடும் மோதல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதுவும் இந்த உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) இரு அணிகளும் சம பலம் பெற்றிருப்பதால் தொடரில் யாரின் கை ஓங்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அந்த வகையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி அந்த கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறது எனலாம். 

பாகிஸ்தானை விட இந்தியா பந்துவீச்சில் பல சாதகங்களை பெற்றிருப்பது இன்றைய போட்டியில் வெளிப்பட்டது. குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியின் ஆடுகளம் பேட்டர்களுக்கே அதிகம் சாதகமானதாக இருக்கும். ஆனால், சரியான லைன் & லெந்த்தில் கட்டுக்கோப்பாக வீசி, குறிப்பாக ஸ்டம்ப்பை குறிவைத்த கோணத்தில் வீசி இந்திய பந்துவீச்சு பாகிஸ்தானின் பேட்டிங் ஆர்டரை சீட்டுக்கட்டாக கலைத்தது.

ரிஸ்வான் செய்த செயல்

பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, பாகிஸ்தானை 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 50 ரன்களையும், ரிஸ்வான் 49 ரன்களையும் அதிகபட்சமாக அடித்தனர். பலரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி பெரிய சுவாரஸ்யமின்றி, இந்தியாவின் ஒற்றை ஆதிக்கத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.

ஆனால் இது ஒருபுறம் இருக்க, இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கே உரித்தான வீரர்களிடையேயான நிகழ்வுகளில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்தன. அதாவது, இமாம் உல் ஹக் அவுட்டான பின்னர், ரிஸ்வான் (Mohammed Rizwan) களத்திற்கு வந்தார். அவர் தனது முதல் பந்தை எதிர்கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டார். 

கேலி செய்த விராட் கோலி

இதனால், எரிச்சலடைந்த விராட் கோலி (Virat Kohli), தனது மணிக்கட்டில் வாட்சை பார்ப்பது போன்று செய்துகாட்டினார். ஆனால், அவர் வாட்சை கட்டவில்லை. சுமார் 1.30 லட்சம் பார்வையாளர்களின் முன்னிலையில் ரிஸ்வான் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதை விராட் கோலி கேலி செய்தார். மேலும், ரிஸ்வான் இதேபோல் எதிரணியின் கவனத்தையும், ரிதத்தையும் கெடுப்பதற்கு பல வழிமுறைகளை மேற்கொள்வார். 

Virat Kohli questioning why Mohammed Rizwan is taking so much time to be ready. pic.twitter.com/yz5IaqGX0Y

— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 14, 2023

கடுப்பாகும் ரசிகர்கள்

கடந்த இலங்கை போட்டியில் அவர் தசை பிடிப்பது போன்று செயல்பட்டு, களத்தில் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். இதனால், இலங்கை பந்துவீச்சு ரிதம் கெட்டது. இது ஒரு தந்திரோபாயம் என்றாலும் ஓவர்களை சரியான நேரத்தில் வீச வேண்டும் என்ற விதிகள் இருக்கும் வேளையில் இதேபோன்ற செயல்களில் பேட்டர்கள் ஈடுபடுவது எதிரணிகளை மட்டுமின்றி பார்க்கும் பார்வையாளர்களையும் கடுப்பாக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.