Smart TV In Discount: ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையில் பல தயாரிப்புகளில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் தள்ளுபடியுடன் வாங்கலாம்.
குறிப்பாக, ஸ்மார்ட் டிவியிலும் நல்ல சலுகைகள் உள்ளன. அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கிய அமேசானின் விற்பனை இன்றுடன் நிறைவடைகிறது. சலுகைகள் முடிவடைவதற்கு முன்பு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், நீங்கள் ஒரு பெரிய திரை டிவி வாங்க நினைத்தால், இப்போது ஒரு நல்ல வாய்ப்புள்ளது தவறவிடாதீர்கள். 65 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் டிவிகளில் விற்பனையில் பெரும் தள்ளுபடி உள்ளது, அதனை இங்கு காணலாம்.
Samsung Crystal iSmart 4K Ultra HD
இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியில் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே உள்ளது. திரையின் புதுப்பிப்பு வீதம் 50Hz ஆகும். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், Zee 5, அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், யூ-ட்யூப் போன்ற செயலிகளை டிவி ஆதரிக்கிறது. அமேசானின் இந்த பெரிய விற்பனையில் டிவி 63 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் ரூ.100 கூப்பன் தள்ளுபடியும், எஸ்பிஐ கார்டுகளுக்கு ரூ.1500 தள்ளுபடியும் உண்டு.
Sony Bravia 4K Ultra HD Smart LED Google TV
சோனியின் 65 இன்ச் டிவியையும் மலிவாக வாங்கலாம். திரையின் பிக்சல் ரெஸ்சோல்யூசன் 3840 x 2160 மற்றும் புதுப்பிப்பு விகிதம் 60Hz ஆகும். இதில் X1 4K செயலி, 3 HDMI போர்ட்கள் மற்றும் 2 USB போர்ட்கள் உள்ளன. டிவி விற்பனையில் 72 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் இதற்கு ரூ.100 கூப்பன் தள்ளுபடியும், எஸ்பிஐ கார்டில் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.
LG 4K Ultra HD Smart LED TV
இந்த ஸ்மார்ட் டிவியில் 3840×2160 பிக்சல் ரெஸ்சோல்யூசன் மற்றும் 60Hz புதுப்பிப்பு விகிதம் கொண்ட 4K அல்ட்ரா HD டிவி உள்ளது. இணைப்பிற்கு, இது 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் மற்றும் புளூடூத் 5.0 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விற்பனையில் டிவியின் விலை 63 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். இதில் ரூ.1000 கூப்பன் தள்ளுபடியும், எஸ்பிஐ கார்டுகளுக்கு ரூ.1500 தள்ளுபடியும் உண்டு.
Acer Advanced I Series
இந்த ஸ்மார்ட் டிவி 3840×2160 பிக்சல் ரெஸ்சோல்யூசன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) உடன் 65 இன்ச் 4k அல்ட்ரா HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிவியில் டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி விஷன் போன்ற வசதிகள் உள்ளன. இதில் 16GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் மற்றும் 2GB RAM உடன் 64 bit குவாட் கோர் பிராஸஸர் உள்ளது. அமேசான் விற்பனையில் இந்த டிவி 47 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. எஸ்பிஐ வங்கி கார்டுகளுக்கு 5000 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு.
TCL Bezel-Less Series 4K Ultra HD
கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவுடன் வரும் இந்த டிவியில் 65 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதன் புதுப்பிப்பு வீதம் (Refresh Rate) 60Hz ஆகும். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், Zee 5, அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், யூ-ட்யூப், கூகுள் பிளே ஸ்டார் உள்ளிட்ட செயலிகளை இந்த Smart TV ஆதரிக்கிறது. டிவி இந்த அமேசான் விற்பனையில் 45 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது.