மேல்மருவத்தூர் சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிறுவி நடத்திவந்தவர் பங்காரு அடிகளார். சித்தர் பீட குருவாக இருந்த பங்காரு அடிகளாரை ‘அம்மா’ என்றே அனைவரும் அன்போடு அழைத்துவந்தனர். 2019 ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. 82 வயதான பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்.
