அமைச்சர்கள் மீதான வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்| Case against Ministers: Notice to Tamil Nadu Govt.

புதுடில்லி, தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய மனு மீது, மாநில அரசு பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கருப்பையா என்பவர் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள பலர் மீது, சொத்து குவிப்பு உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முறையாக விசாரணை நடத்தப்படாமல், சில அமைச்சர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

எனவே, அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.