வட்டி விகிதம் குறையுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்| Only time will tell whether interest rates will come down

புதுடில்லி: தற்போதைய நிலையில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதம் தொடர்ந்து அதிகமாகவே நீடிக்கும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இப்போதிருக்கும் சூழலில் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் நிலையே நீடிக்கும். இருப்பினும், எவ்வளவு காலம் தொடர்ந்து அதிகமாக நீடிக்கும் என்பதற்கு, காலமும், உலக சூழலும் தான் பதில் சொல்ல முடியும்.

தாக்கம்

உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை தான் நம்மை பொறுத்தவரை முக்கியமானது. அவற்றின் விலை ஏற்ற இறக்கங்கள், பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக, கடந்த 15 நாட்களில், அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இது, மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவை பொறுத்தவரை, உலகில் எந்த ஒரு சிக்கல் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் நம் பொருளாதரத்தில் பிரதிபலிக்கிறது.

எனினும், இம்மாதிரியான சூழலிலும், நம் உள்நாட்டு பொருளாதாரமும், நிதி நிலையும் தொடர்ந்து வலுவான நிலையிலேயே உள்ளன.

பொருளாதார வளர்ச்சி

நடப்பாண்டு ஜனவரி முதல், தற்போது வரை, இந்திய ரூபாயின் மதிப்பு 0.60 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க டாலரின் மதிப்பு 3 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரூபாயின் மதிப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களை தடுக்க, ரிசர்வ் வங்கி அன்னிய செலாவணி சந்தையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

வலுவான உள்நாட்டு தேவையின் பின்னணியில், நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகின் புதிய வளர்ச்சி இயந்திரமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவை பொறுத்தவரை, உலகில் எந்த ஒரு சிக்கல் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் நம் பொருளாதரத்தில் பிரதிபலிக்கிறது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.