அட பாவமே! பாண்டியாவால் அணியில் நீக்கப்பட்ட ஷர்துல்! நியூஸி-க்கு எதிரா இந்தியாவின் பிளேயிங் லெவன்

உலக கோப்பை  21வது லீக் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரு மாற்றங்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா காயமடைந்திருப்பதால் அவரால் இப்போட்டியில் விளையாட முடியாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக அணியில் யாரை கொண்டு வருவார்கள் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்டபோது, ஹர்திக் பாண்டியா பவுலரா? பேட்ஸ்மேனா? என்றால் அவர் பேட்டிங் ஆல்ரவுண்டர் தான், அதனால் அவருக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என கூறினார். 

காரணம், இந்திய அணியின் கீழ் நிலை பேட்ஸ்மேன்களில் மிகவும் தரமான பிளேயர் மற்றும் சேஸிங்கில் அணியை வெற்றிக்கு அழைத்துச் திறன் ஆகியவை சூர்யகுமார் யாதவிடம் இருக்கிறது. இஷான் கிஷன் அப்படியான ரோலில் ஐபிஎல் தொடரில் உள்ளிட்ட எந்த போட்டியிலும் விளையாடியது இல்லை. ஆனால் சூர்யகுமார் யாதவ் லோ ஆர்டரில் தான் பல போட்டிகளில் விளையாடி, அணிகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதனடிப்படையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சூர்யகுமார் யாதவுக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். அடுத்தபடியாக ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருக்கிறார்.

October 22, 2023

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பேட்டிங் சூர்யகுமார் வந்திருப்பதால், ஷர்துல் தாக்கூருக்கு பதில் முகமது ஷமியை கொண்டு வந்திருக்கின்றனர். காரணம் பேட்டிங் பலமாக இருக்கிறது. ஷர்துல் தாக்கூரும் பெரிய அளவில் இந்த தொடரில் பந்துவீசவில்லை. ஒரு சில ஓவர்கள் மட்டுமே வீசினார். பேட்டிங் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் ஷமிக்கு வாய்ப்பு கொடுத்தால் பவுலிங்கில் இந்திய அணி இன்னும் பலமாக இருக்கும் என்கிற அடிப்படையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா காயமடையாமல் இருந்திருந்தால் பிளேயிங் லெவனில் மாற்றம் வந்திருக்காது. ஷர்துல் தாக்கூரும் அப்படியே இருந்திருப்பார். பாண்டியா காயமடைந்ததால் ஷர்துல் தாக்கூரின் இடமும் இந்திய அணியில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, இப்போது வெளியேற்றப்பட்டிருக்கிறார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.