உயிர்காக்கும் மருந்துகள் காசாவுக்கு அனுப்பியது இந்தியா| Life-Saving Medicines, Sleeping Bags: Gift From People Of India To Gaza

புதுடில்லி: இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்துள்ள காசாவுக்கு இந்தியா சார்பில் மருந்து மற்றும் நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு விமானப்படை விமானம் கிளம்பியது. எகிப்து சென்று அங்கு சாலை மார்க்கமாக காசாவுக்கு இவை கொண்டு செல்லப்பட உள்ளன.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசாவில் வசிக்கும் மக்களுக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. 6.5 டன் மருந்து மற்றும் 32 டன் பேரிடர் நிவாரண பொருட்களுடன் இந்திய விமானப்படை விமானம் எகிப்தின் அல் அரிஸ் விமான நிலையத்திற்கு கிளம்பி உள்ளது.

latest tamil news

நிவாரண பொருட்களில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், ஸ்லீப்பிங் பைகள், தார்ப்பாய்கள், சுகாதார பொருட்கள், தண்ணீர் தூய்மைப்படுத்தும் மாத்திரை உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.