செங்கல்பட்டு பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து பரந்தூர் கிராம மக்கள் சிறப்பு கிராமக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார 13 கிராமப்புறங்களை உள்ளடக்கி 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள் விளை நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். […]
