திருடர்கள் பயமா… சிசிடிவி இப்போ சீப்பா கிடைக்குது – சின்ன அசைவையும் போட்டுக் கொடுத்துரும்!

Amazon Great Indian Festival 2023: தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் பலரும் தங்களின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க நேருகிறது. பாதுகாப்பு என்று பேசும்போது சிசிடிவி கேமராக்களை தவிர்க்க முடியாது. 

இந்த காலகட்டத்தில் திருட்டு முதல் அத்தனை குற்றங்களை கண்டறியவும், அதற்கு ஆதாரமாகவும் சிசிடிவி காட்சிகளே உள்ளன. அந்த வகையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான அம்சங்கள் பொருந்திய சிசிடிவி கேமராக்களைப் (CCTV Camera) பயன்படுத்துகின்றனர். இது வீட்டிற்கு மட்டுமின்றி நீங்கள் வைத்திருக்கும் கடை, குடோன் போன்ற பல இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கேமராக்கள் மூலம் நீங்கள் தொலைவில் இருந்தும் கூட கேமரா பொருத்திய பகுதிகளை கண்காணிக்க முடியும். நீங்களும் இந்த சமயத்தில் சிசிடிவி கேமராக்களை வாங்க விரும்பினால், சில சிறப்பு வாய்ந்த கேமராக்களை இங்கு காணலாம். அமேசான் நிறுவனத்தின் தற்போதைய பண்டிகை கால விற்பனையில் இந்த சிசிடிவி கேமராக்களை நீங்கள் 1500 ரூபாய்க்கும் குறைவாக வாங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

தள்ளுபடி விலையில் சிசிடிவி கேமராக்கள்

EZVIZ ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமரா

இந்த சிசிடிவி கேமராவை உங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதன் வீடியோ HD தரத்தில் கிடைக்கிறது. இந்த கேமராவில் LED Infrared அம்சம் உள்ளது. இந்த கேமராவின் வரம்பு 12 மீட்டர், அதாவது 12 மீட்டர் வரை இது தெளிவாக காட்சிப்படுத்தும். இந்த கேமரா இரவு பார்வை முதல் மோஷன் டிடெக்டர் (Motion Detector) மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு (Memory Card) ஸ்லாட் வரை பல வசதிகளை வழங்குகிறது. மேலும், அமெசானின் அலெக்சா மற்றும் கூகுள் கேமராவில் இதனை இணைத்துக்கொள்ளலாம். இதன் விலை 1,499 ரூபாய் ஆகும்.

Havells 360° கேமரா

360 கோணத்திலும் காட்சிப்படுத்தும் இந்த சிசிடிவி கேமரா இரவிலும் தெளிவாக காட்சிகளை பதிவு செய்யும் (Night Vision). இதில் உள்ளே ஸ்பீக்கர் மற்றும் மைக் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. இதில் 64ஜிபி மெமரி கார்டை நீங்கள் வைக்கலாம். இது HD தரம் கொண்ட வீடியோவை தரும். அமேசானில் இந்த கேமராவை 1,499 ரூபாய்க்கு வாங்கலாம்.

CP PLUS

இந்த கேமரா மிக நுண்ணறிவு கொண்டதாகவும். இது Wi-Fi இணைப்பு, 360 டிகிரி காட்சி மற்றும் இயக்க எச்சரிக்கை (Motion Alert) ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த கேமராவை பக்கவாட்டின் இரு பக்கமும், மேலேயும் கீழேயும் இயக்கும் வசதியும் உள்ளது. இது இரவிலும் தெளிவாக பதிவு செய்யும். இது தவிர, கேமராவில் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது. இது மட்டுமல்லாமல், கேமராவில் தனியுரிமை பயன்முறையும் உள்ளது. அதை நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப இயக்கலாம் மற்றும் ஆப் செய்தும் கொள்ளலாம். இந்த கேமராவின் விலை 1,198 ரூபாய் ஆகும்.

Conbre BULBCAM V380 Pro

இந்த கேமராவின் அசல் விலை 2,999 ரூபாய் ஆகும். ஆனால் அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனையின் போத நீங்கள் 1,399 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த கேமராவை மின்விளக்கு போன்று நீங்கள் நிறுவலாம். இது 1080P HD வீடியோ தரத்தைக் கொண்டுள்ளது. இந்த கேமரா 360 டிகிரி கவரேஜ் மற்றும் இரவு பார்வைக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது தவிர, மோஷன் டிடெக்ஷனும் கேமராவில் வழங்கப்பட்டுள்ளது, இது சிறிய அசைவைக் கூட கண்காணித்து உங்களுக்கு அறிவிப்பை அனுப்பும். 128 GB வரையிலான எஸ்டி கார்டையும் இதில் நிறுவலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.