வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹாங்சு: பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கப்பதக்கம் வென்றார்.
சீனாவின் ஹாங்சுவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 4வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 303 (191 வீரர், 112 வீராங்கனை) பேர் பங்கேற்கின்றனர்.
அதில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், 73.29 மீ., தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய உலக சாதனையையும் படைத்தார்.
இதன் மூலம் இந்தியா 11 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என இதுவரை 36 பதக்கம் வென்றுள்ளது. பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement