புதுடில்லி; இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, அடுத்த 2.5 ஆண்டுக்குள் டாடா நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளார். உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமரின் உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டம், இந்தியாவை ஸ்மார்ட்போன் மற்றும் ஏற்றுமதிக்கான நம்ப தகுந்த முதன்மையான மண்டலமாக மாற்றி உள்ளது. இப்போது, இன்னும் 2.5 ஆண்டுக்குள் டாடா நிறுவனம் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்காக ஐபோன்களை தயாரிக்க துவங்க உள்ளது. விஸ்ட்ரான் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏற்றுக் கொண்ட டாடா குழுமத்திற்கு நன்றி.
இந்தியாவில் இருந்து உலகளாவிய விநியோகச் சங்கிலியை அதன் தலைமையில் இந்திய நிறுவனங்களைக் கொண்டு உருவாக்க ஆப்பிள் நிறுவனத்திற்குப் பெரிதும் உதவியதற்கும், பங்காற்றியதற்கும் விஸ்ட்ரான் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
உலகளாவிய மின்னணு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவாக நிற்கும். இதன் மூலம் இந்தியாவை தங்கள் நம்பகமான உற்பத்தி மற்றும் திறமை சார்ந்த பங்குதாரராக மாற்றப்படுவதுடன், உலகளாவிய மின்னணு சக்தியாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் கனவை நனவாக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement