சென்னை: தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்மூலம் மொத்தம் 2.84 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.403 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு […]