யூ-ட்யூப்பில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கணுமா… அப்போ இதை பண்ணுங்க!

Ring Light In Amazon Sale 2023: சமூக ஊடக யுகத்தில் இப்போது ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும் நீங்கள் நினைத்த எதை வேண்டுமானாலும் எங்கிருந்தாலும் செய்யலாம். குறிப்பாக, யூ-ட்யூப், இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு பிரபலமடைய வேண்டுமென்றால், தொழில்நுட்ப ரீதியாக உங்களுக்கு ஒரு ஸ்மார்ட்போன் இருந்தாலே போதுமானதுதான். அதாவது அடிப்படையாக நீங்கள் வீடியோ போட தொடங்குவதற்கு ஸ்மார்ட்போன் மட்டும் போதும். 

ஆனால், அதுவே வீடியோவை இன்னும் மெருகேற்றவும், தரமான வகையில் வழங்கவும் உங்களுக்கு சில சாதனங்கள் தேவைப்படலாம். அந்த வகையில், நீங்கள் யூ-ட்யூப் வீடியோக்கள் அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குபவராக இருந்தால், ரிங் லைட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரிங் லைட் உங்கள் வீடியோக்களுக்கு சரியான வெளிச்சத்தை வழங்குவது மட்டுமல்லாமல், ரிங் லைட் ஸ்டாண்டில் மொபைலை வைப்பதன் மூலம் முழு வீடியோவையும் நீங்கள் எந்த சிரமுமின்றி படம்பிடித்துக் கொள்ள முடியும். 

மேலும், இதனை செய்ய உங்களுக்கு உதவிக்கு என்று யாரும் தேவையில்லை. இதில் தற்போது அமேசானின் தள்ளுபடி விற்பனையின் போது, இந்த ரிங் லைட்கள் 84 சதவீதம் வரை பம்பர் தள்ளுபடி சலுகையில் கிடைக்கிறது. இந்த சலுகைகள் மூலம் நீங்கள் மிக மலிவான விலையில் ரிங் லைட்டை வாங்கலாம்.

Osaka­ Professional LED Ring Light

ஒசாகா புரொபஷனல் எல்இடி ரிங் லைட்டின் அசல் விலை 7,500 ரூபாய் ஆகும். அமேசானின் தற்போதைய தள்ளுபடி விற்பனையில் 84 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது, இதன் மூலம் இதை வெறும் நீங்கள் 1198 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த 10 இன்ச் ரிங் லைட் டிரைபாட் ஸ்டாண்ட் மற்றும் 3 கலர் டெம்பரேச்சர் மோடுகளைக் கொண்டுள்ளது.

Amazon Basics LED Ring Light 

அமேசான் பேசிக்ஸ் LED ரிங் லைட்டின் விலை 2,799 ரூபாய் ஆகும். ஆனால் அமேசான் விற்பனையில் 65 சதவீத தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. இந்தச் சலுகையின் மூலம் நீங்கள் 989 ரூபாய்க்கே வாங்கலாம். இந்த 12 இன்ச் ரிங் லைட்டுடன் டிரைபாட் ஸ்டாண்ட் கிடைக்கிறது.

Digitek Professional 46cm LED Ring Light 

இந்த ரிங் லைட்டின் அசல் விலை 7,495 ரூபாய் ஆகும். அமேசான் விற்பனையில் 53 சதவீத தள்ளுபடியுடன் வெறும் 3,499 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, இந்த ரிங் லைட்டை நீங்கள் மாதத் தவணை செலுத்தியும் வாங்கலாம். 170 ரூபாய் முதல் மாதத் தவணை திட்டம் தொடங்குகிறது. இதில் புளூடூத் ரிமோட், ரிங் லைட்டுடன் 158 செமீ லைட் ஸ்டாண்ட் உள்ளிட்டவை உள்ளது.

BROLAVIYA Overhead Video Mobile Stand

இந்த ரிங் லைட்டின் அசல் விலை 1995 ரூபாய் ஆகும். இதை 28 சதவீத தள்ளுபடியுடன் 1,442 ரூபாய்க்கு வாங்கலாம். இது 10 இன்ச் ரிங் லைட் மற்றும் இதனை நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள இயலும்.

Tygot 10 Inch Big LED Ring Light

இந்த ரிங் லைட்டின் அசல் விலை 1,999 ஆகும். ஆனால் நீங்கள் இதை அமேசான் தள்ளுபடி விற்பனையில் வெறும் 599 ரூபாய்க்கு வாங்கலாம். 7 அடி நீளத்தில் இருக்கும் இதோடு, மடிக்கக்கூடிய மற்றும் லைட்வெயிட் டிரைபாட் ஸ்டாண்டும் கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.