அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான அட்வென்ச்சர் டூரிங் ரக ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிதாக செர்பா 450 லிக்யூடு கூல்டு என்ஜின் கொண்டதாகவும், ரைடிங் மோடு வசதி, பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக அறிமுகம் செய்ய உள்ளது.
முன்பாக விற்பனையில் உள்ள ஹிமாலயன் 411 பைக்கிலிருந்து முற்றிலும் மேம்பட்ட புதிய டிசைன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
Royal Enfield Himalayan
முந்தைய LS411 என்ஜினை விட முற்றிலும் மேம்பட்ட புதிய Sherpa 450 என அழைக்கப்படுகின்ற 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் 42 மிமீ திராட்டிள் பாடி எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மற்றும் ரைட் பை வயர் சிஸ்டத்தை கொண்டுள்ளது.
மேலும், ஈக்கோ, பெர்ஃபாமென்ஸ் போன்ற ரைடிங் மோடு ஆப்ஷனையும் பெறுகின்றது.
காமெட் வெள்ளை, ஸ்லேட் பாப்பி ப்ளூ, ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், கஷா பிரவுன் மற்றும் ஹன்லே பிளாக் என 5 நிறங்களை ஹிமாலயன் 452 பெறுகின்ற பைக்கில் ஸ்டீல் ட்வின் ஸ்பார் டீயூப்லெர் சேஸ் உடன் ஷோவா 43மிமீ USD ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் லிங்க்-டைப் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் பெற்று இரு பக்கமும் 200 மிமீ வீல் டிராவல் ஆனுமதிக்கின்றது. மிக தீவிரமான ஆஃப் ரோடு சாகங்களுக்கு ஏற்ற 230 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வந்துள்ளது.
ஹிமாலயன் பரிமாணங்கள்
ஹிமாலயன் 450 பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2,245 மிமீ அகலம் 852 மிமீ மற்றும் உயரம் 1,316 மிமீ . அடுத்து வீல்பேஸ் 1510 மிமீ மற்றும் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 196 கிலோ மட்டுமே உள்ளது.
மிக முக்கிய பைக்கின் இருக்கை உயரம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. பைக்குடன் பெறும் நிலையான இருக்கை 825 மிமீ ஆக அமைக்கப்பட்டுள்ளது, விரும்பினால் அதை 845 மிமீ ஆக உயர்த்தலாம். இருக்கை உயரத்தை குறைக்க விரும்பினால் 805 மிமீ ஆக குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. மேலும் ரியர் ஏபிஎஸ் ஆனது சுவிட்ச் ஆஃப் செய்யும் முறையில் வழங்கப்பட்டுள்ளது. முன்புற டயரில் 90/90 R21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 140/80 R17 அங்குல வீல் டயர் இடம்பெற்றுள்ளது.
ஸ்மார்ட்போன் இணைப்பு அம்சங்களுடன் பெற்ற புதிய 4 இன்ச் வண்ண TFT கிளஸ்ட்டரில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிரிப்பர் நேவிகேஷன் மாட்யூலை ஹிமாலயனுக்காக மேம்படுத்தியுள்ளது, ஏனெனில் அது இப்போது முழு அளவிலான கூகுள் மேப்ஸ் உடன் நேவிகேஷன், இசை, டாக்குமென்ட் சேமிப்பு பெறுவதுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விலை
முழுமையாக எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் விளக்கு பெறுகின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் அறிமுகம் நவம்பர் 7 ஆம் தேதி EICMA 2023 மோட்டார் ஷோவில் வெளியிடப்படலாம். ஆனால் விலை ராயல் என்ஃபீல்டு மோட்டோவெர்ஸ் 2023 (முன்பாக ரைடர் மேனியா) ஆனது நவம்பர் 23 ஆம் தேதி அறிவிக்கப்படலாம்.
புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் விலை ரூ.2.75 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.