பெற்றோர்களை கோர்ட், ஜெயில் வாசலில் நிற்கவைத்து விடாதீர்கள் டிடிஎப் வாசன் தாயார் உருக்கமான வேண்டுகோள். விலையுயர்ந்த வெளிநாட்டு பைக்குகளை வாங்கி இந்திய சாலைகளில் அதிவேகமாக ஓட்டுவதும் பைக் சாகசத்தில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டவர் டிடிஎப் வாசன். பைக்கில் இவர் செய்யும் வேடிக்கைகளை தனது யூ டியூப்பில் பதிவேற்றுவதன் மூலம் பணம் பார்த்துவந்த இந்த 23 வயது இளைஞரை லட்சக்கணக்கான சிறுவர்கள் பின்தொடர்கின்றனர். சாலை விதிகளை மீறி சாகசம் செய்துவந்த இவர்மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் […]
