முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஐதராபாத்,

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானிக்கு கடந்த வாரம், மூன்று மின்னஞ்சல்கள் முறையே ரூ.20 கோடி, ரூ.200 கோடி, ரூ.400 கோடி பணம் கேட்டு வந்தன. பணம் கொடுக்காவிட்டால் முகேஷ் அம்பானியைக் கொலை செய்ய போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து அம்பானியின் பாதுகாப்புக் குழு தலைவர், மும்பை காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த நிலையில், புகார் தொடர்பாக தெலுங்கானாவைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் வனபர்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை வரும் 8 ஆம் தேதி வரை விசாரணைக்காக காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. .

அந்த மின்னஞ்சல் முகவரி சஹாதப் கான் என்பவருக்கு சொந்தமானது என்றும் பெல்ஜியத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். இதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகா்க்கப்போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இது தொடா்பாக பீகாரைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.