கொச்சி,கேரளாவில் உள்ள கடற்படை விமான தளத்தில், தரையில் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் தெற்கு கடற்படை தலைமையகம் உள்ளது. இங்குள்ள ஐ.என்.எஸ்., கருடா விமான தளத்தில் நேற்று கடற்படை ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
இதையொட்டி, கடற்படையில் பணியாற்றும் மெக்கானிக் உட்பட இருவர் ஹெலிகாப்டரை இயக்கி பார்த்து சோதனை நடத்தினர். அப்போது வானில் இருந்து இறக்கியபோது தரையில் மோதி, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில், ஹெலிகாப்டரில் பயணித்த மெக்கானிக் யோகேந்திர சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement