சென்னை: லோகேஷ் இயக்கிய லியோ படத்தில் கெளதம் மேனன் நடித்திருந்தார். முன்னதாக விஜய் – கெளதம் கூட்டணியில் யோஹான் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படம் உருவாகவிருந்தது. 2012ல் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியானாலும், அதன்பின்னர் ஷூட்டிங் ஏதும் தொடங்கவில்லை. இந்நிலையில், யோஹான் திரைப்படம் இனிமேல் உருவாக வாய்ப்பே இல்லை என கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.