ஹைதராபாத்: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அதில், ரூ. 20 கோடி கொடுக்காவிட்டால் முகேஷ் அம்பானியின் குடும்பத்தை அழித்து விடுவதாக இருந்தது. புகாரின் அடிப்படையில், மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது மிரட்டல் விடுத்தவர் தெலங்கானாவில் இருப்பதாகவும், அவர் பெயர் ஷதாப் கான் என்பதும் தெரிய வந்தது. உடனடியாக மும்பை போலீஸார் தெலங்கானா வந்து, குறிப்பிட்ட நபரை கைது செய்தனர். 19 வயதுள்ள ஷதாப் கானிடம் மும்பை போலீஸார் நடத்தியவிசாரணையில் அவரது உண்மையான பெயர் கணேஷ் ரமேஷ் வனபர்த்தி என்பது தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.