புதுச்சேரி: புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர் கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், புதுச்சேரி மாநில அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி, ஆட்சிப் பொறுப்பில் பல்வேறு பதவிகளை வகித்த திரு. ப. கண்ணன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்று புதுச்சேரி மாநில […]
