நேற்று மாலை மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதி, ஹப்புத்தளை -பத்கொட பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த இடம் இன்று காலை மீண்டும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரீட்சிக்கப்பட்டதுடன், வீதியின் ஒரு வழியைத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மோசமான காலநிலையினால் ஹப்புத்தளை பாத்கொட பிரதேசத்தில் ஏற்பாட்டை மண்சரிவு காரணமாக, பதுளை கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டதுடன் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அவை மிகவும் அகலம் குறைந்ததாகவும், மரக்கிளைகள் நிறைந்தும் காணப்படுவதனால், அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதற்கிணங்க பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம், மின்சார சபை, மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனம், ஒன்றிணைந்து இந்த பாதையை திறப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. .
எனினும், பொதுமக்கள் மண்சரிவு இடம்பெறக்கூடிய இடங்கள் மற்றும் பாதுகாப்பற்ற பிரதேசங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.