33வது IMBL கூட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான 33வது வருடாந்த சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு (IMBL) சந்திப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) காங்கேசன்துறைக்கு வடக்கே அமைந்துள்ள IMBL இல் INS சுமித்ரா கப்பலில் நடைபெற்றது என்று இலங்கை கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தூதுக்குழுவிற்கு வட மத்திய கடற்படைத் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன ப பானகொட தலைமை தாங்கியதுடன், இந்தியக் குழுவிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதி கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ரவி குமார் திங்ரா தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் தத்தமது கடல் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளில் கலந்துடையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் குறித்த கலந்துரையாடியதாகவும் கடற்படை ஊடகம் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.