Jio Diwali Offer: தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். நண்பர்கள், உறவினர்கள் உடன் தீபாவளியை கொண்டாடுவார்கள், இனிப்புகள், உணவுகளை பகிர்ந்து மகிழ்வார்கள். இன்றைய காலகட்டத்தில் பலரும் நேரடியாக கடைக்கு செல்வதற்கு பதில் Swiggy போன்ற உணவு டெலிவரி செயலிகள் மூலம் ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்கின்றனர். இருப்பினும், அதில் டெலிவரி சார்ஜ் உள்ளிட்ட பல கூடுதல் செலவுகளும் உள்ளன. ஆனால், ஜியோ இந்த கஷ்டத்தை போக்க ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சலுகைகள்
ரிலையன்ஸின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு நல்ல சலுகையுடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் Swiggy One Lite சந்தா திட்டமும் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த சந்தா திட்டம் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வருகிறது.
மேலும் இது பல சலுகைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட சந்தா திட்டமாக வழங்கப்படுகிறது, இதில் உணவு விநியோக சந்தாவும் அடங்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் என்னென்ன நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
ஜியோ 866 ரூபாய் திட்டம்
ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் இந்த புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் விலை 866 ரூபாய் ஆகும். பல கவர்ச்சிகரமான நன்மைகளை இது உள்ளடக்கியது. இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இது 84 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
இது தவிர, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள் இந்தத் திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான நன்மைகளில் ஒன்று, இது 3 மாதங்களுக்கு Swiggy One Lite சந்தாவுடன் வருகிறது.
பொதுவாக, Swiggy One Lite சந்தா திட்டம் 600 ரூபாய்க்கு வரும். ஆனால், ஜியோவின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் 866 ரூபாய்க்கு வருங்கிறது. இந்த திட்டத்தை பெறுவதன் மூலம் Swiggy சந்தாவை இலவசமாகப் பெறுவீர்கள். Swiggy செயலியில் இருந்து நீங்கள் ஆர்டர் செய்யும் போது, 149 ரூபாய்க்கு மேல் உணவு ஆர்டர்களில் 10 இலவச ஹோம் டெலிவரிகளைப் பெறுவீர்கள். 199 ரூபாயின் இன்ஸ்டாமார்ட் ஆர்டரில் 10 இலவச ஹோம் டெலிவரிகளைப் பெறுவீர்கள்.
இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கு கூடுதல் கட்டணமும் இதனால் வசூலிக்கப்படாது. இதனுடன், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள உணவு விநியோகத்தில் 30% வரை கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும். ஜியோ மற்றும் ஸ்விக்கியின் தொகுக்கப்பட்ட திட்டங்களில் MyJio கணக்கு மூலம் பணம் செலுத்தும் போது, உங்களுக்கு ரூ.50 கேஷ்பேக்கும் வழங்கப்படும்.