
செந்தில் கதை நாயகனாக நடிக்கும் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'
ராக் அண்ட் ரோல் மற்றும் ஏ.பி புரொடக்ஷன் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இணைத்து தயாரிக்கும் படம் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன், அபினயஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார். பிரபு, சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கிறார்கள். ராஜ் கண்ணாயிரம் இயக்கி உள்ளார். வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோசப் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ராஜ் கண்ணாயிரம் கூறியதாவது: இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கும், ஒரு யூடியூபருக்கும் இடையில் ஒரு பிரச்னை ஏற்பட்டு எம்.எல்.ஏ.,வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூடியூபர். இந்தப் பிரச்னையில் இருந்து 24 மணிநேரத்திற்குள் அந்த யூடியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை. 20 நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. என்றார்.