காசாவுக்கு செல்லாமல் கருத்து சொல்வதா?: ஏஞ்சலினாவுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தியது. பின்னர் இது போராக மாறியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள், பல லட்சம் மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். இதற்கு ஐ.நா சபையின் பிரதிநிதியாக இருக்கும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட செயல் மிகவும் பயங்கரமான செயல். மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆனால், காசாவில் தற்போது நடக்கும் செயல்களை பார்க்கும் போது கவலையாக உள்ளது. அடிப்படை மனித உரிமை மறுக்கப்படுகிறது. காசா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ தேவைகள் கூட கிடைக்காத நிலை உள்ளது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களால் வெகுஜன புதைகுழியாக காசா மாறி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. லட்சக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் தண்டிக்கப்படுவதை உலகம் கவனித்துக் கொண்டு தான் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அளித்த பேட்டியில், “ஏஞ்சலினா ஜூலி காசாவிற்கு செல்லவில்லை. அவரது கருத்தை நிராகரிக்கிறேன். காசாவின் உண்மை நிலைகளை அவர் பார்வையிடவில்லை. காசாவில் தற்போது போர் நடப்பது உண்மை. ஆனால் மக்கள் உயிர் வாழ முடியாத அளவிற்கான நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. இந்த போரின் முடிவானது காசா மக்கள் கண்ணியமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும். பொதுமக்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் மீது குற்றம் சாட்ட வேண்டாம். பயங்கரவாதிகளை வேரறுக்க இஸ்ரேலுக்கு உதவுங்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.