மதுரை: மழை காரணமாக மதுரை மற்றும் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை, நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பொழிவு பதிவானது. இதன் காரணமாக மதுரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா. இதே போல கோவை மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும், (நவ. 9, 10) பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.