ஆமீர்கான் நடிக்க கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பயோகிராபி ?

இந்திய கிரிக்கெட் உலகின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து ஓய்வு பெற்றவர் யுவராஜ் சிங். முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பை 2007ம் ஆண்டு நடந்த போது இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சருக்குப் பறக்கவிட்டு சாதனை புரிந்தவர் யுவராஜ் சிங். 2000ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட ஆரம்பித்து 2017ல் ஓய்வு பெற்றார். பல ஒரு நாள் போட்டிகள், டி 20 போட்டிகளில் அவருடைய பேட்டிங், பந்து வீச்சு, சிறந்த பீல்டிங் ஆகியவற்றில் இந்திய அணி வெற்றி பெற்றதற்குப் பெரும் பங்களித்தவர்.

இந்திய அணியில் பரபரப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது 'கேன்சர்' நோயால் பாதிக்கப்பட்டவர். சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்து விளையாடி அசத்தியவர்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க ஹிந்தி நடிகர் ஆமீர்கான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக பெரும் தொகை கொடுத்து அந்த உரிமையை யுவராஜிடமிருந்து பெற்றுள்ளாராம். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி வீரரான எம்எஸ் தோனியின் பயோகிராபி படம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆமீர்கான் நடித்து 2001ல் வெளிந்த 'லகான்' படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனால், யுவராஜின் வாழ்க்கை வரலாற்றைப் பொறுப்பாகவும், சிறப்பாகவும் ஆமீர்கான் தயாரித்து நடிப்பார் என்ற நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நம்பிக்கை அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.