’11 வயது சிறுவன் ஒருவன், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, ‘நான் உயிருடன் இருக்கிறேன்’ என்றும், நான் கொலை செய்யப்பட்டதாக என் தந்தையால் போடப்பட்ட கொலை வழக்கு போலியானது என்றும் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேந்ர்த அபய் சிங் என்ற இச்சிறுவன் 2013 -ம் ஆண்டு முதல் தனது தாய்வழி தாத்தாவுடன் வசித்து வந்திருக்கிறார். அவரின் தந்தை வரதட்சணை கேட்டு அவரது தாயைத் துன்புறுத்தி வந்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தாயின் இறப்பிற்குப் பிறகு, சிறுவனின் தாத்தா சிறுவனின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை, அபயின் தாத்தா, உள்ளிட்ட மனைவியின் வீட்டார் அவனைக் கொலை செய்துவிட்டதாக புகார் செய்ய, அதில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அங்கு தான் உயிரோடு தான் இருப்பதாக அவர் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தை நாடிய அவரின் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அதில் அபய், “நான் உயிரோடு தான் இருக்கிறேன். நான் கொலை செய்யப்பட்டதாக என் தந்தை தாத்தாவின் மீது போலியாகக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளார். நான் என் தாத்தா பாட்டியுடன் பாதுகாப்பாக இருக்கிறேன். காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து, என் தாத்தா பாட்டியை மிரட்டுகிறார்கள். நான் அவர்களுடன் தொடர்ந்து இருக்க விரும்புகிறேன், எனவே இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம், ‘வழக்கு விசாரணை முடியும் வரை சிறுவனின் தாத்தா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது’எனத் தெரிவித்துள்ளது. அடுத்த ஜனவரி மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.