Renault Duster – 2024 ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி டிசைன் படங்கள் வெளியானது

ரெனால்ட் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி காரின் காப்புரிமை பெறப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. இந்த மாடலின் அடிப்படையில் 7 இருக்கை கொண்ட  மாடலும் வரவுள்ளது.

இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் டஸ்ட்டர் பிரசத்தி பெற்றதாக இருந்தாலும் புதிய மாடலை ரெனோ கொண்டு வருவதில் இந்திய சந்தைக்கு தாமதப்படுத்திய நிலையில், 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

2024 Renault Duster

புதிய டஸ்ட்டர் மாடல் பிக்ஸ்டர் கான்செப்ட் சார்ந்த வடிவமைப்பினை ஒத்திருக்கிறது. இது தனித்துவமான எல்இடி விளக்குகள் நேர்த்தியான கிரில் வடிவமைப்புடன் கருப்பு நிறத்திலான பூச்சு மற்றும் ரூஃப் தண்டவாளங்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.

உட்புறம் மிகவும் பிரீமியம் தோற்றத்தை பெறக்கூடும் வகையில் அமைந்திருக்கலாம், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன், டிஜிட்டல் தொடுதிரை அம்சத்துடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் மற்றும் ADAS தொழில்நுட்பத்துடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் டஸ்ட்டர் மூன்று என்ஜின் விருப்பங்களில் கிடைக்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் என்ஜின் கொண்டதாக அமைந்திருக்கலாம்.

வரும் நவம்பர் 29 ஆம் தேதி டேசியா டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2024 Renault Duster Design Patent Side view

2024 Renault Duster Design Patent Rear

Source

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.