சென்னை: சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் கருங்காலியால் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக கருங்காலி மாலை என்கிற பெயர் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அடிபடுகிறது. அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. ஒருபக்கம் கருங்காலி மாலையின் சக்தி இதுதான் என பலரும் சோஷியல் மீடியாவில் பேசி தொடங்கி உள்ளனர்.
