
டபுள் தமாகா தீபாவளி கொண்டாடிய ஸ்வேதா பண்டேகர்
சந்திரலேகா சீரியலில் நடித்து புகழ் பெற்ற ஸ்வேதா பண்டேகர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மால்மருகன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அண்மையில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், தலை தீபாவளி கொண்டாடும் மால்மருகன் – ஸ்வேதா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவையும் நடத்தி டபுள் தமாகா கொண்டாட்டத்தை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிரிதன் கிருஷ்ணா, சர்வஸ்ரீ என பெயர் வைத்துள்ளனர். இந்த இனிமையான தருணத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்வேதா பண்டேகர் தன் குழந்தைகளின் புகைப்படத்துடன் தீபாவளி வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.