மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, தீபாவளியன்று தனது வீட்டை மின்விளக்குகளால் அலங்கரிக்க சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக கர்நாடக காங்கிரஸ் தனது X சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
ಜಗತ್ತಿನ ಏಕೈಕ ಮಹಾಪ್ರಾಮಾಣಿಕ ಹೆಚ್.ಡಿ ಕುಮಾರಸ್ವಾಮಿಯವರ ಜೆ ಪಿ ನಗರದ ನಿವಾಸದ ದೀಪಾವಳಿಯ ದೀಪಾಲಂಕಾರಕ್ಕೆ ನೇರವಾಗಿ ವಿದ್ಯುತ್ ಕಂಬದಿಂದ ಅಕ್ರಮ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕ ಪಡೆದಿದ್ದಾರೆ.
ಒಬ್ಬ ಮಾಜಿ ಸಿಎಂ ಆಗಿ ವಿದ್ಯುತ್ ಕಳ್ಳತನ ಮಾಡುವ ದಾರಿದ್ರ್ಯ ಬಂದಿದ್ದು ದುರಂತ!@hd_kumaraswamy ಅವರೇ ನಮ್ಮ ಸರ್ಕಾರ ಗೃಹಜ್ಯೋತಿಯಲ್ಲಿ 200 ಯೂನಿಟ್… pic.twitter.com/7GKHeRyQuS
— Karnataka Congress (@INCKarnataka) November 14, 2023
`உலகின் மிக நேர்மையான மனிதரான குமாரசாமியின் ஜே.பி.நகர் வீடு, மின்கம்பத்திலிருந்து நேரடியாக சட்டவிரோத மின் இணைப்புடன் அலங்கார விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டது. அரசு இலவசமாக 200 யூனிட் மின்சாரம்தான் வழங்குகிறது, 2,000 யூனிட் அல்ல.
மாநிலத்தில் மின்சாரம் இல்லாத நிலையிலும், விவசாயிகளுக்கு ஏழு மணிநேரம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கும்போது, இத்தகைய மலிவான திருட்டுத்தனத்தில் ஈடுபடுகிறீர்களா… கர்நாடகா இருளில் மூழ்கிவிட்டது என்று கூறிவிட்டு இப்போது திருட்டு மின்சாரத்தில் உங்கள் வீட்டை மின்விளக்குகளால் ஜொலிக்க விட்டிருக்கிறீர். உங்கள் பாணியில் கேட்டால், மாநிலமே இருட்டிலிருக்கும்போது உங்கள் வீட்டுக்கு மட்டும் ஒளி வேண்டுமா… விவசாயிகளிடம் மின்சாரத்தை திருடி விளையாட வேண்டுமா?’ என குமாரசாமிக்கு காங்கிரஸ் கேள்வியும் எழுப்பியது.

இதற்குப் பதிலளித்த குமாரசாமி, “இந்த கவனக்குறைவுக்கு நான் வருந்துகிறேன். BESCOM (பெங்களூரு மின்சாரம் வழங்கும் நிறுவனம்) அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கட்டும். அபராதத்தை நான் செலுத்துகிறேன்” என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, BESCOM நடவடிக்கையை தொடங்கும் என மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்திய மின்சாரச் சட்டம் பிரிவு 135-ன் (மின்சாரத் திருட்டு) கீழ் குமாரசாமி மீது BESCOM விஜிலென்ஸ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.