அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதை அடுத்து அதானி மீதான விசாரணை மீண்டும் துவங்கவாய்ப்பு. இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டபோது காட்டப்பட்ட நிலக்கரியின் மதிப்பை இந்திய துறைமுகத்திற்கு வந்து இறங்கும்போது அதன் மதிப்பை பலமடங்கு உயர்த்திக்காட்டி மோசடியில் ஈடுபடுவதாக அதானி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. துபாய், சிங்கப்பூர், தைப்பே (தைவான்) ஆகிய நாடுகளில் உள்ள பினாமி நிறுவனங்கள் […]