ஊட்டி இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் ரயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் தண்டவாளத்தின் குறுக்கே சாய்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் அடித்துச் செல்லப்பட்டன. எனவே கடந்த 4 ஆம் தேதி முதல் 7-ஆம் […]
