என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை : செல்வராகவன்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று அகமதாபாத் நகரில் உள்ள மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிரிக்கெட் போட்டி என்றாலே நமது பல சினிமா பிரபலங்கள் அது பற்றி அவர்களது கருத்துக்களை வெளியிடுவார்கள். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இத் தோல்வி குறித்து, “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது,” என மிகவும் மன வருத்தத்தில் பதிவிட்டுள்ளார். அவரைப் போலவே பலரும் அவர்களது வருத்தமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.