ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் எங்கு, எப்போது பார்ப்பது…? இந்திய பிளேயிங் லெவன் இதோ!

IND vs AUS, 1st T20 Match: ஒருநாள் போட்டிக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) கடந்த அக. 5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதிவரை இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரின் சூடு ஆறுவதற்குள் இந்தியா – ஆஸ்திரேலியா (IND vs AUS T20) அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (நவ. 23) முதல் தொடங்குகிறது.

கேப்டன் SKY!

இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி (India National Cricket Team) நேற்று முன்தினம் இரவு பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. இதில், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) கேப்டனாக நியமிக்கப்பட்டார், முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாகவும், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டியில் அணியும் இணையும் ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு இந்தியா வாய்ப்பளிக்கப்பட்டது.

இஷானுக்கு இடம் உண்டா…

பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், திலக் வர்மா, ரின்கு சிங், சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ் சர்மா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இதில் ஓப்பனிங்கில் ருதுராஜ் உடன் யார் இறங்குவார் என்ற கேள்வி உள்ளது. சற்று அனுபவம் வாய்ந்த இஷான் கிஷனா அல்லது ஜொலிக்கும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலா என்பது  கேள்வியாக இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஜெய்ஸ்வால் – கெய்க்வாட் ஜோடிதான் விளையாடியது.

மேலும், விக்கெட் கீப்பர் என ஜிதேஷ் சர்மாவை மட்டும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஜித்தேஷ் 5ஆவது வீரராக களமிறங்குவார். எனவே, இஷான் கிஷன் (Ishan Kishan) கீப்பராகவும் இல்லாவிட்டால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சூர்யகுமார் யாதவ் ஒன்-டவுனில் இறங்குவார் என்பதால் நான்காவது வீரராக திலக் வர்மா இருக்கிறார். நான்காவது இடத்தில் ஒரு இடதுகை வீரராக திலக் வர்மா அல்லது இஷான் இறக்கப்படலாம், ஆனால் இதிலுமே திலக் வர்மாவுக்குதான் அதிக வாய்ப்பு. 6ஆவது, 7ஆவது இடத்தில் சிவம் தூபே மற்றும் ரின்கு சிங் ஆகியோரில் ஒருவர் தேர்வாகலாம். 

பிளேயிங் லெவனில் யார் யார்?

வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர். சூழற்பந்துவீச்சில் பிஷ்னோய், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர், திலக் வர்மாவும் ஒரு சில ஓவர்களை வீசுவார். இதில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிஷ்னோய் ஆகியோருக்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், ஆல்-ரவுண்டர்களாக உள்ள வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். 

ஜெய்ஸ்வால் – கெய்க்வாட்;  சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா – ஜித்தேஷ் சர்மா; ரின்கு சிங் – சிவம் தூபே; அக்சர் படேல் – பிஷ்னோய்; அர்ஷ்தீப் சிங் – பிரசித் கிருஷ்ணா ஆகியோர்தான் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக இரண்டு ப்ரீமியம் வேகப்பந்துவீச்சாளர், இரு ப்ரீமியம் ஸ்பின்னர், ஒரு பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், ஒரு பார்ட்டைம் ஸ்பின்னர் ஆகியோர் பந்துவீச்சில் நிறைவை தருகின்றனர்.

துடிப்பான ஆஸ்திரேலிய அணி

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியில் சீன் அபோட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேக்ஸ்வெல், ஸ்மித், ஸ்டோனிஸ் உள்ளிட்ட உலகக் கோப்பை விளையாடிய வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். அடுத்த வருடம் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை மனதில் வைத்து இந்த அணி வடிவமைக்கப்பட்டுள்ளது. அனுபவமும், இளம் வீரர்களின் துடிப்பும் ஆஸ்திரேலிய அணி அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இளம் வீரர்களால் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த டி20 தொடரில் முதல் போட்டி நாளை (நவ. 22) விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இரண்டாவது போட்டி நவ.26ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், மூன்றாவது போட்டி நவ.28ஆம் தேதி கௌகாத்தியிலும், நான்காவது போட்டி டிச. 1ஆம் தேி நாக்பூரிலும், கடைசி போட்டி டிச. 3ஆம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறுகிறது.

இலவசமாக எங்கே, எப்போது பார்ப்பது?

அனைத்து போட்டிகள் அன்றைய தினத்தின் இரவு 7 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தொலைக்காட்சியில் Sports18 மற்றும் Colors Cineplex சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகும். ஜியோ சினிமாவின் செயலியிலும், இணையதளத்திலும் நேரலையில் இலவசமாகவே காணலாம். 

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார். (ஷ்ரேயாஸ் ஐயர் – 4ஆவது, 5ஆவது போட்டி)

ஆஸ்திரேலியா அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பாட்சன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.