சென்னை: கொரோனா தொற்றுக்கு பிறகு, அதிக அளவில் இளைஞர்கள் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இது சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து பல நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. `கொரோனா நோய்த் தொற்றின் அலைகளைத் தடுப்பதில் அரசு மற்றும் விஞ்ஞானிகள் தீவிர கவனம் செலுத்தியதால் […]
