சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஒழுக்கமற்ற செயற்பாடு வன்மையாகக் கண்டிக்கப்படுவதாகவும், அதற்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.