'தங்க தேவதை' ஆக வந்த கார்த்திகா, எவ்வளவு 'சவரன்' இருக்கும் ?

80களின் முன்னணி கதாநாயகியான நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவந்து ரசிகர்களை, குறிப்பாக பெண்களை அதிகம் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

முகத்தைத் தவிர உடல் முழுவதும் தங்க நகைகளாலும், விலையுயர்ந்த பட்டுப் புடவையாலும் மணப் பெண்ணாக, தங்க தேவதை போல தங்கத்திலேயே ஜொலித்தார் கார்த்திகா. கேரளாவில் பெண்களுக்கு குறைந்த எடையுள்ள அதே சமயம் பிரம்மாண்டமான நகைகளை திருமணப் பரிசாகக் கொடுப்பது வழக்கம்.

சமூக வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கலாம். அவர்களே கழுத்திலிருந்து இடுப்பு வரையிலும் நீள நீளமான நகைகளை அணியும் போது பல கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள குடும்பத்து வாரிசான கார்த்திகா அணிந்து வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இது போன்ற நகைகள் நமது தமிழ்ப் பெண்கள் அணியும் காசுமாலையை விட மிகக் குறைவான எடை கொண்ட நகைகள்தான் என்று சொல்கிறார்கள். அவ்வளவு நகைகள் அணிந்து மணப் பெண்ணை அலங்காரம் செய்வதில் தங்களது குடும்பப் பெருமை வெளிப்படுவதாக கேரள குடும்பத்தினர் நினைப்பார்களாம்.

கார்த்திகாவின் நகைகளைப் பார்த்து வியந்தவர்களுக்கு இப்போது தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அந்த நகைகள் எத்தனை சவரன் இருக்கும், அவற்றின் மதிப்பு எவ்வளவு இருக்கும். புகைப்படங்களைக் கொடுத்து யாராவது நகை மதிப்பீட்டாளரிடம்தான் கேட்கவேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.