ஐபோன் 14 மொபைல் எதில் விலை குறைவு… அமேசானா பிளிப்கார்ட்டா…!

Iphone 14, Amazon vs Flipkart: பண்டிகை தினங்களை முன்னிட்டு இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச்கள், ப்ளூடூத் ஹெட்போன், இயர்பாட் என பல்வேறு வகையிலான மின்னணு சாதனங்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வந்தன. வீட்டு உபயோக பொருள்களான ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் கூட இந்த தள்ளுபடி விற்பனையில் இடம்பெற்றிருந்தது. 

விநாயகர் சதுர்த்திக்கு ஆரம்பித்த இந்த தள்ளுபடி விற்பனை நவராத்தி, தீபாவளி பண்டிகை வரை என சுமார் 45 நாள்களுக்கு நடைபெற்றது. அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் என இரண்டு நிறுவனங்களும் நடத்திய தள்ளுபடி விற்பனையில் பலரும் தங்களுக்கு தேவையான பொருள்களை குறைவான விலையில் வாங்கினர். இருப்பினும், பண்டிகை தினங்கள் முடிந்த பிறகும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சில தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் நீடிக்கிறது. 

அந்த வகையில், முதல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 அமேசான் மற்றும் பிளிப்கார்ட் என இரண்டிலும் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது. இந்நிலையில், எதில் நீங்கள் ஐபோன் 14 மொபைலை குறைந்த விலையில் வாங்கலாம் என்பதை இதில் காணலாம். ஐபோன் 15 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்திய நிலையில், 14 சீரிஸின் விலை கடந்த சில மாதங்களில் கடுமையாக குறைந்தது எனலாம். முன்னர் கூறியது போலேவே அமேசாந் கிரேட் இந்தியன் சேல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் என இரண்டிலும் ஆப்பிள் ஐபோன் 14 மொபைல் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது. 

ஐபோன் 14 மொபைலில் உள்ள சிப்செட் ஐபோன் 13 மாடலில் உள்ளது என்றாலும் அதில் பல அப்கிரேட்களும் இருந்தது. ஐபோன் 14 சீரிஸ் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இந்த சீரிஸில் ஐபோன் 14, ஐபோன் 14 Pro, ஐபோன் 14 Plus என மூன்று மாடல்கள் இருந்தன. இதன் விலையும் 79 ஆயிரத்து 900 ரூபாயில் இருந்து தொடங்கியது. தற்போது ஐபோன் 15 சீரிஸ் அறிமுகப்படுத்தியதில் இருந்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. 

அமேசான் – பிளிப்கார்டில் எவ்வளவு?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ஐபோன் 14 மொபைல் அனைத்து தள்ளுபடிகள் மற்றும் ஆப்பர்களுக்கு பின்னர் 58 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதேபோல் அமேசானில் தற்போது ஸ்டோர் விலையில் இருந்து 7 ஆயிரத்து 901 ரூபாய் குறைக்கப்பட்டு 61 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. 

இருப்பினும், அமேசான் உங்களின் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கும் எக்ஸ்சேஞ் ஆப்பரில் சுமார் 34 ஆயிரத்து 500 ரூபாய் வரை தள்ளுபடியை பெறலாம். இதன்மூலம், அமேசானில் 27 ஆயிரத்து 499 ரூபாய்கே நீங்க வாங்கலாம். இதன்மூலம், நீங்கள் இணையத்தில் ஆப்பிள் ஐபோன் 14 மொபைலை வாங்க நினைத்தால் அமேசானிலேயே வாங்கலாம். பிளிப்கார்டில் உங்களுக்கு எக்ஸ்சேஞ் ஆப்பர் இந்தளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.